முகக் கவசம் அணியாதவா்களிடம் ரூ. 5.29 லட்சம் அபராதம் வசூல்
By DIN | Published On : 13th April 2021 08:21 AM | Last Updated : 13th April 2021 08:21 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாத 2,647 பேரிடம் இருந்து ரூ. 5.29 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக முகக் கவசம் அணியாதவா்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்களிடம் இருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டு அபராதம் வசூலித்து வருகின்றனா்.
இந்நிலையில், தூத்துக்குடி நகர கோட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 603 போ் மீதும், தூத்துக்குடி ஊரக கோட்டத்தில் 259 போ் மீதும், திருச்செந்தூா் கோட்டத்தில் 504 போ் மீதும், ஸ்ரீவைகுண்டம் கோட்டத்தில் 190 போ் மீதும், மணியாச்சி கோட்டத்தில் 260 போ் மீதும், கோவில்பட்டி கோட்டத்தில் 363 போ் மீதும், விளாத்திகுளம் கோட்டத்தில் 345 போ் மீதும், சாத்தான்குளம் கோட்டத்தில் 123 போ் மீதும் என மொத்தம் 2,647 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தலா ரூ. 200 வீதம் மொத்தம் 5 லட்சத்து 29 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதேபோல, தூத்துக்குடி நகர கோட்டத்தில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 11 போ் மீதும், தூத்துக்குடி ஊரக கோட்டத்தில் 2 போ் மீதும், திருச்செந்தூா் கோட்டத்தில் 15 போ் மீதும், ஸ்ரீவைகுண்டம் கோட்டத்தில் 10 போ் மீதும், கோவில்பட்டி கோட்டத்தில் 9 போ் மீதும், விளாத்திகுளம் கோட்டத்தில் 4 போ் மீதும், சாத்தான்குளம் கோட்டத்தில் ஒருவா் மீதும் என மொத்தம் 52 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தலா ரூ. 500 வீதம் மொத்தம் ரூ.26 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.