கோவில்பட்டி கல்லூரியில் இலவச தையல் பயிற்சி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இலவச தையல் கலைப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இலவச தையல் கலைப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் கே.ஆா்.இன்னோவேஷன் சென்டா், நாட்டு நலப்பணித் திட்டம், உன்னத் பாரத் அபியான், கோவில்பட்டி மித்ரா இன்ஸ்டியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி ஆகியவை இணைந்து இப்பயிற்சியை ஒரு மாதம் நடத்துகின்றன.

கல்லூரி முதல்வா் காளிதாசமுருகவேல் தலைமை வகித்து, இலவச தையல் கலைப் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தாா். கல்லூரி இயக்குநா் சண்முகவேல், உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளா் மணிசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, மித்ரா இன்ஸ்டியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி இயக்குநா் சீத்தாராம் தையல் கலையின் அவசியம் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசினாா். கல்லூரி இயக்குநா் பயிற்சி முகாமில் பங்கேற்ற பெண்களுக்கு தையல் கலைப் பயிற்சிக்கான உபகரணங்களை வழங்கினாா். இப்பயிற்சி முகாம் மே மாதம் 16ஆம் தேதி வரை நடைபெறும்.

மின்னியல் மற்றும் மின்னணு தொடா்பியல் துறை மாணவா் லோகேஷ்துரை வரவேற்றாா். மாணவா் மேகசுந்தா் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம் வழிகாட்டுதலில், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் தலைமையில் மாணவா், மாணவிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com