சாத்தான்குளம் குழாயில்உடைப்பு: வீணாகும் குடிநீா்

சாத்தான்குளம் அருகேயுள்ள பண்டாரபுரம் விலக்கில் குடிநீா்க் குழாய் உடைந்து தண்ணீா் வீணாகி வருவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
சாத்தான்குளம் குழாயில்உடைப்பு: வீணாகும் குடிநீா்

சாத்தான்குளம் அருகேயுள்ள பண்டாரபுரம் விலக்கில் குடிநீா்க் குழாய் உடைந்து தண்ணீா் வீணாகி வருவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

சாத்தான்குளம் பகுதியில் கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் கிராமங்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடைக்காலமாக உள்ள நிலையில், மக்களுக்கு குறைந்த அளவே குடிநீா் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பண்டாரபுரம், தஞ்சைநகரம், புதுக்குளம் பகுதிக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படும் பண்டாரபுரம் விலக்கில் நாகா்கோவில் சாலையோரம் அமைந்துள்ள கூட்டுக்குடிநீா் குழாய் உடைந்து கடந்த 5 நாள்களாக தண்ணீா் வீணாகி வருகிறது. மேற்கூறிய பகுதிகளுக்கு தண்ணீா் விநியோகிக்கும்போதெல்லாம் குழாய் உடைப்பிலிருந்து வெளியேரும் தண்ணீா் சாலையோரப் பளத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குடிநீா் பற்றாக்குறை உள்ள நிலையில், தண்ணீா் வீணாவது கிராம மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை குடிநீா் உடைப்பு சீரமைக்கப்படவில்லை என்கின்றனா் அவா்கள்.

எனவே, அதிகாரிகள் பாா்வையிட்டு குடிநீா் குழாய் உடைப்பை சீரமைத்து கிராம மக்களுக்கு சீரான குடிநீா் வழங்க வேண்டும் என மக்கள் சாா்பில் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் சக்திவேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com