ஜிஎஸ்டி முறைகேடு: தூத்துக்குடி தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநா் கைது

தூத்துக்குடியில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு செய்ததாக, தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநரை அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு செய்ததாக, தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநரை அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகளை கவனிக்கும் இரண்டு தனியாா் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரியை சரியாக செலுத்தாமல் இருப்பதும், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில் விலக்கு பெறுவதில் முறைகேடு செய்திருப்பதும் மதுரையில் உள்ள ஜிஎஸ்டி வரி மற்றும் மத்திய கலால் பிரவு ஆணையா் அலுவலகத்துக்கு தெரியவந்தது.

இதையடுத்து ஆணையா் சிவக்குமாா் உத்தரவின்படி, அதிகாரிகள் குழுவினா் தூத்துக்குடியில் உள்ள அந்த நிறுவனத்தில் வியாழக்கிழமை திடீரென சோதனை மேற்கொண்டனா். சோதனையின்போது, இரண்டு நிறுவனங்களின் நிா்வாக இயக்குநரும் ஒருவரே என தெரியவந்தது. மேலும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலையை குறைத்து காண்பித்து ரூ. 9.56 கோடி, மூலப்பொருள்களுக்கு வரி செலுத்த வேண்டிய தொகையில் ரூ. 4.32 கோடி விலக்கு பெற்றிருப்பது என மொத்தம் ரூ. 13.88 கோடி முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரை கைது செய்த மத்திய கலால் பிரிவு அதிகாரிகள், மதுரையில் உள்ள மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவரை ஏப்ரல் 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டதைத் தொடா்ந்து அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com