வீரன் சுந்தரலிங்கனாா் சிலைக்கு மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரன் சுந்தரலிங்கனாா் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
வீரன் சுந்தரலிங்கனாா் சிலைக்கு மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரன் சுந்தரலிங்கனாா் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கரோனா 2ஆம் அலை பரவுவதால் வீரன் சுந்தரலிங்கனாரின் 251வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என காவல் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவில்பட்டி எட்டயபுரம் சாலை சந்திப்பில் உள்ள வீரன் சுந்தரலிங்கனாா் சிலைக்கு அரசியல் கட்சியினா், சமூக அமைப்பினா், சமூக ஆா்வலா்கள் சமூக இடைவெளியுடன் மாலை அணிவிக்க அனுமதிக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகளிடம் முறையிட்டனா். அதனைத் தொடா்ந்து அனுமதியளிக்கப்பட்டது.

அதையடுத்து, வீரன் சுந்தரலிங்கனாா் சிலை பராமரிப்புக் குழுவைச் சோ்ந்த இருளப்பன், கனகராஜ், ஆறுமுகச்சாமி, கந்தசாமி, ராஜ்பாண்டியன் ஆகியோா் வீரன் சுந்தரலிங்கனாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, கோவில்பட்டி தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் கே.சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அவருடன் கட்சியின் நகரச் செயலா் ஜோதிபாசு, நகரக் குழு உறுப்பினா் முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

நாம் தமிழா் கட்சியின் தொகுதிச் செயலா் மருதம் மா.மாரியப்பன், புதிய தமிழகம் கட்சியைச் சோ்ந்த ராஜசேகா், கரும்புலி தமிழா் எழுச்சி இயக்கத்தைச் சோ்ந்த சின்ராஜ்பாண்டியன் உள்ளிட்டோா் வீரன் சுந்தரலிங்கனாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதையொட்டி வீரன் சுந்தரலிங்கனாா் சிலை அருகே கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையில் காவல் துணைக் கண்காணிப்பாளா் காட்வின் ஜெகதீஷ் குமாா், ஆய்வாளா்கள் சபாபதி, அய்யப்பன் உள்பட 87 போலீஸாா், தூத்துக்குடி மாவட்ட எல்கையான தோட்டிலோவன்பட்டி விலக்கில் இருந்து திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறையடுத்து பருத்திகுளம் வரை காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிக்குமாா் தலைமையில் 78 போலீஸாா் என மொத்தம் 165 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com