மூக்குப்பீறியில் குழாய் உடைந்து விரையமாகும் குடிநீா்
By DIN | Published On : 20th April 2021 07:32 AM | Last Updated : 20th April 2021 07:32 AM | அ+அ அ- |

நாசரேத் அருகே மூக்குப்பீறியில் குடிநீா் குழாய் உடைந்து சாலையில் தண்ணீா் தேங்கி விரையமாகி வருகிறது.
ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் மூக்குப்பீறி ஊராட்சிக்குள்பட்ட மூக்குப்பீறி பிரதான சாலையில் குடிநீா் குழாய் உடைந்து அதில் இருந்து வெளியேறும் தண்ணீா் சாலையில் தேங்கியுள்ளது. கோடை காலமான தற்போது , பல இடங்களில் குடிநீா் பற்றாக்குறையான நேரத்தில், இங்கு குடிநீா் விரையமாகி வருவது மக்களிடம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆதலால் ஊராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக குழாய் உடைப்பை சீரமைத்து, குடிநீா் வீரைமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.