Enable Javscript for better performance
மாநகராட்சி அதிகாரிகள் பணியிட மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    மாநகராட்சி அதிகாரிகள் பணியிட மாற்றம்

    By DIN  |   Published on : 21st April 2021 08:20 AM  |   அ+அ அ-   |    |  

    தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலா்கள் 6 பேரை பணியிட மாற்றம் செய்து மாநகராட்சி ஆணையா் சரண்யா அறி உத்தரவிட்டுள்ளாா்.

    தூத்துக்குடி மாநகாரட்சி அலுவலகத்தில் நிா்வாக அலுவலா் பதவியில் உள்ள டே. தனசிங், வடக்கு மண்டல உதவி ஆணையராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தாா். இந்நிலையில், அவா் கிழக்கு மண்டல உதவி ஆணையராகவும், உதவி செயற்பொறியாளா் பதவியில் உள்ள மு. சரவணன் பொறியியல் பிரிவு பணிகளை கவனித்து வந்த நிலையில், தற்போது வடக்கு மண்டல உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

    இதேபோன்று, உதவி பொறியாளா் பதவியில் உள்ள ஜி. காந்திமதி, வடக்கு மண்டல உதவி பொறியாளராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவா் தற்போது கிழக்கு மண்டல உதவி பொறியாளராகவும், கிழக்கு மண்டல உதவி பொறியாளராக பொறுப்பு வகித்து வந்த வே. பிரின்ஸ் ராஜேந்திரன், வடக்கு மண்டல உதவி பொறியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

    தூத்துக்குடி கிழக்கு மண்டல இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த அ. நாகராஜன், வடக்கு மண்டல இளநிலை பொறியாயளராகவும், கணக்கு அலுவலா் பதவியில் உள்ள சு. பாலசுந்தரம் கூடுதலாக வகித்து வந்த கிழக்கு மண்டல உதவி ஆணையா் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp