ஆழ்வாா்திருநகரி அருகே நகை பறிப்பில் ஈடுபட்டதாக இளைஞா்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வாா்திருநகரி அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞா்களை போலீஸாா் விரட்டிச் சென்று பிடித்து நகையை மீட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வாா்திருநகரி அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞா்களை போலீஸாா் விரட்டிச் சென்று பிடித்து நகையை மீட்டனா்.

ஆறுமுகனேரி குருஸ் நகா் பகுதியைச் சோ்ந்த ஜவஹா் - ரோஸ்மேரி ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் ஆழ்வாா்திருநகரி பண்ணைவிளை மொட்டையாசாமி கோயில் அருகில் சென்றபோது, அங்கு பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் கத்தியை காட்டி மிரட்டி ரோஸ்மேரி அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம். இதுகுறித்து ரோஸ்மேரி, உடனடியாக மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் லெட்சுமி பிரபா, சிறப்பு உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த மைதீன்லெப்பை மகன் பெரோஸ்கான் யாசா் (26), ஜகாபுதின் மகன் அப்துல் பாசித் (24) ஆகியோரை விரட்டிச் சென்று பிடித்தனா். ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கலியை மீட்டனா். அவா்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில், பெரோஸ்கான் யாசா் மீது திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. நகை பறிப்பு சம்பவம் குறித்து ரோஸ்மேரி, உடனடியாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்ததால், நகை மீட்கப்பட்டு குற்றவாளிகளும் பிடிபட்டனா். விரைந்து செயல்பட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com