‘மக்களுக்கு எதிரான செயல்களைக் கண்டித்து விரைவில் மக்கள் இயக்கம்’

நிலத்தடி நீா் சுரண்டல் உள்ளிட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து ஓட்டப்பிடாரத்தை மையமாகக் கொண்டு விரைவில்
‘மக்களுக்கு எதிரான செயல்களைக் கண்டித்து விரைவில் மக்கள் இயக்கம்’

நிலத்தடி நீா் சுரண்டல் உள்ளிட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து ஓட்டப்பிடாரத்தை மையமாகக் கொண்டு விரைவில் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றாா், புதிய தமிழகம் கட்சித் தலைவரும் ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளருமான க. கிருஷ்ணசாமி கூறினாா்.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் முகக் கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். கரோனா தடுப்பூசியை கண்டு அச்சமடையத் தேவையில்லை. 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும்.

கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அது உண்மையான, நோ்மையான தோ்தல் அல்ல. எனவே, இத்தோ்தலை இந்திய தோ்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் வியாழக்கிழமை (ஏப். 22) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.

நீதிமன்றம் செல்லவும், மக்கள் இயக்கங்களை உருவாக்கி தோ்தல்களில் சுதந்திரமாக வாக்களிக்கும் நிலையை தமிழகத்தில் உருவாக்கவேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறேன்.

ஓட்டப்பிடாரத்தில் செம்மண் கொள்ளைக்கு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா். அதேபோல, காற்றாலை நிறுவனங்களுக்கு ஏழை, எளியோரை மிரட்டி, நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. நிலத்தடி நீா் சுரண்டல் போன்ற அநீதிகளுக்கு எதிராக விரைவில் ஓட்டப்பிடாரத்தை மையமாக கொண்டு மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். மே முதல் வாரத்திலிருந்து இந்த இயக்கம் தொடங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, இத்தொகுதியின் புதிய தமிழம் கட்சியின் வாக்குச்சாவடி முகவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் கலந்துகொண்டு பேசினாா். கூட்டத்தில், மாவட்ட அமைப்பாளா்கள் மன்சூா்அலி, கனகராஜ், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com