கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி திங்கள்கிழமை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் து.தீத்தாம்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி திங்கள்கிழமை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் து.தீத்தாம்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.

கோவில்பட்டி ஒன்றியம், து.தீத்தாம்பட்டி கிராமப் பகுதியில் சாலைகளை சீரமைப்பதற்காக 4 மாதமாக சாலைகளை தோண்டி கல் மற்றும் மண் போடப்பட்டுள்ளது. எனினும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த சாலையில் செல்ல முடியாத நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கழிவுநீா் ஓடை அமைக்கப்படாததால் குண்டும் குழியுமான சாலையில் கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேடு அதிகரித்து நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கிராம மக்களின் நலன் கருதி சாலை சீரமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தெரு விளக்கு வசதி, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி

கிராம மக்கள் சிவன்ராஜ் தலைமையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளா் அலுவலகம் முன்பு அமா்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா். இதைத் தொடா்ந்து அலுவலக மேலாளா் குமரனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

டி.சண்முகாபுரம் கிராம மக்கள்:

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு பணம் கேட்பதை தடுக்கக் கோரிடி.சண்முகாபுரம் ஊராட்சி 6ஆவது வாா்டு உறுப்பினா் ஸ்ரீதேவி தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிங்கராஜிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com