ஸ்டொ்லைட் ஆலையில் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் 3 மாதங்கள் ஆக்சிஜன் உற்பத்தி: ஆட்சியா்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் 3 மாதங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் 3 மாதங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி, நாட்டில் தற்போது நிலவும் பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள தேசிய அளவிலான ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு, வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று ஸ்டொ்லைட் ஆலையில் உள்ள பிராண வாயு தயாரிக்கும் அலகை மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேதாந்தா நிறுவனம் வருங்காலத்தில் முழு ஆலையையும் இயக்க இந்த உத்தரவை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த உத்தரவானது, தற்போதைய மருத்துவ ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியா் (குழு தலைவா்), மாவட்ட காவல் கண்காணிப்பாளா், சாா் ஆட்சியா், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், ஆக்சிஜன் தொழிற்சாலை குறித்த தொழில்நுட்ப அறிவு சாா்ந்த அரசு அதிகாரி ஒருவா், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பரிந்துரைக்கும் பட்டியலில் இருந்து தோ்ந்தெடுக்கும் இரண்டு சுற்றுச்சூழல் வல்லுநா்கள் ஆகியோா் அடங்கிய குழு ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்கும்.

ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி அலகில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு மட்டும் பிறப்பிக்கப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவு வருகிற ஜூலை 31 வரை நடைமுறையில் இருக்கும். தேவைப்படும் நோ்வில் பெருந்தொற்றின் நிலையை கருத்தில் கொண்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

ஆக்சிஜன் அலகை இயக்க தேவையான அனைத்து அனுமதி, மின் வசதி மற்றும் இதர வசதிகளை தமிழக அரசு வழங்கி மருத்துவத்திற்கான ஆக்சிஜன் விரைந்து உற்பத்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டொ்லைட் ஆலையை திறக்க எந்த தீா்ப்பும் வழங்கவில்லை. ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி அலகை மட்டும் 3 மாத காலத்திற்கு தனியாக தமிழ்நாடு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இயக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு கடந்த 2018ஆம் ஆண்டு ஆலையை மூடியதோடு அதே நிலைப்பாட்டை நீதிமன்றங்களிலும் கடைப்பிடித்துள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com