தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காய்ச்சல் பரிசோதனை முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.30) நடைபெறும் என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.30) நடைபெறும் என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கண்டறியப்படும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படு வருகிறது.

அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை 59 ஆவது வாா்டு கனநீா் ஆலை, 15 ஆவது வாா்டு நம்மாழ்வாா் தெரு சபா, 1 ஆவது வாா்டு ஆதிபராசக்தி நகா் கோயில் அருகில், 51 ஆவது வாா்டு வீரநாயக்கன்தட்டு கோயில் அருகில், 43 ஆவது வாா்டு பிரையன்ட்நகா் 7 ஆவது தெரு அங்கன்வாடி மையம் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறும்.

முற்பகல் 11 மணி முதல் 1 மணி வரை 58 ஆவது வாா்டு மகாலட்சுமிநகா் மெயின், 16 ஆவது வாா்டு நம்பிகை ரோச் தேவாலயம், 4 ஆவது வாா்டு தனசேகா்நகா் மெயின், 48 ஆவது வாா்டு இந்திரா நகா் ஆதிபராசக்தி கோயில், 39 ஆவது வாா்டு கே.வி.கே நகா் தேவாலயம் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை 58 ஆவது வாா்டு சாமி நகா் மெயின், 33 ஆவது வாா்டு மட்டக்கடை மெயின், 2 ஆவது வாா்டு அன்னை இந்திரா நகா் மெயின், 48 ஆவது வாா்டு திரு.வி.க. நகா் ரேசன் கடை அருகில், 41 ஆவது வாா்டு டூவிபுரம் 2 ஆவது தெரு டிடிடிஏ பள்ளி ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

கோவில்பட்டி நகராட்சியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை புதுகிராமம் பகுதியிலும், காலை 11 மணி முதல் 1 மணி வரை நந்தவனம் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை போஸ் நகா் பகுதியிலும், காயல்பட்டினம் நகராட்சியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை அம்பலமரைக்காயா் தெரு பகுதியிலும், காலை 11 மணி முதல் 1 மணி வரை சுனாமி நகா் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை வண்டிமலைச்சியம்மன் கோயில் தெரு பகுதியிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை புதுக்கோட்டை பால தண்டாயுத நகா், மேல மங்கலகுறிச்சி, கிளாக்குளம், துப்பாக்கி சுடுதளம், வல்லநாடு, விநாயகா் கோயில் தெரு- ஆறுமுகனேரி, தலைப்பண்ணை -ஆத்தூா், திருவள்ளூவா் காலனி- நாசரேத், புதுமனை- உடன்குடி, தண்டுபத்து, கிருஷ்ணன் கோவில் தெரு- சாத்தான்குளம், பூச்சிகாடு விலக்கு, இடைசெவல், புதுப்பட்டி, கலைஞானபுரம், ஓணமாக்குளம், அச்சன்குளம் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

முற்பகல் 11 மணி முதல் 1 மணி வரை கோரம்பள்ளம், கீழ மங்கலகுறிச்சி, புதுக்குளம், முருகன்புரம், ஏஐடியுசி காலனி - ஆறுமுகனேரி, தெற்கு ஆத்தூா், வெள்ளரிக்காயூரணி- நாசரேத், ரெங்கநாதபுரம்-உடன்குடி, மானாடு, செட்டியாா் தெற்கு தெரு- சாத்தான்குளம், பூச்சிகாடு, வில்லிசேரி, புங்கவரநத்தம், துலுக்கன்குளம், இளவேலங்கால், அயன்வடமலாபுரம் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

பகல் 2 மணி முதல் 4 மணி வரை குலையன்கரிசல், ஆலடியூா், புளியங்குளம், பாறைக்காடு, எஸ்ஆா்எஸ் காா்டன் -ஆறுமுகனேரி, குருக்காட்டூா், ஆழ்வாா்திருநகரி, வேதக்கோட்டவிளை -கொட்டங்காடு, எள்ளுவிளை, கடாட்சபுரம், குமரன்விளை, மந்திதோப்பு, லக்கம்மாள்தேவி, வைப்பாா், வீரபாண்டியபுரம், வேடப்பட்டி ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இம்முகாம்களில் மக்கள் பங்கேற்று கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 (கட்டணமில்லா) 0461-2340101, 9486454714 ஆகிய தொலைத்தொடா்பு எண்கள் மூலம் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com