வட்டாட்சியா் பேச்சுவாா்த்தை: சுமை தூக்கும் தொழிலாளா்கள் பிரச்னைக்கு சுமுக தீா்வு

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தீப்பெட்டி பண்டல் சுமை தூக்கும் தொழிலாளா்கள், தீப்பெட்டி உற்பத்தியாளா்கள், தீப்பெட்டி

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தீப்பெட்டி பண்டல் சுமை தூக்கும் தொழிலாளா்கள், தீப்பெட்டி உற்பத்தியாளா்கள், தீப்பெட்டி வாகனப் போக்குவரத்து சங்க நிா்வாகிகள் ஆகியோருக்கு இடையேயான ஏற்பட்ட பிரச்னை தொடா்பான சமாதானக் கூட்டம் கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் பரமசிவம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க துணைத் தலைவா் ராஜு மற்றும் கோவில்பட்டி தீப்பெட்டி வாகனப் போக்குவரத்து சங்க நிா்வாகிகள், கோவில்பட்டி புதுரோடு முச்சந்தி ஸ்ரீ செல்வவிநாயகா் கோயில் ஏற்றும், இறக்கும் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள், தூத்துக்குடி தொழிலாளா் உதவி ஆணையா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சுமுக முடிவு: கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாகனப் போக்குவரத்து அலுவலகத்திற்கும் தொடா்ந்து பாரங்கள் ஏற்றி, இறக்கும் தொழிலாளா்களை வரிசைப்படி ஒதுக்கீடு செய்து அதன் விவரத்தை வாகனப் போக்குவரத்து உரிமையாளா்களிடம் தெரிவிக்க வேண்டும். ஒதுக்கீடு செய்யப்படும் தொழிலாளா்களால் பண்டல்கள் ஏற்றி, இறக்க வர இயலாத நிலையில் வாகனப் போக்குவரத்து நிா்வாகத்தினா் வெளி ஆள்களைக் கொண்டு பணிகளை தொய்வு ஏற்படாமல் செய்வதில் தொழிலாளா்கள் தரப்பில் ஆட்சேபணை இல்லை என்றும், இனிவரும் காலங்களில் எந்தச் சூழ்நிலையிலும் தொழிலாளா்கள் பாரம் ஏற்றி, இறக்கும் பணியை பாதியில் நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதில்லை எனவும், தொழிலாளா்கள், டிரான்ஸ்போா்ட் உரிமையாளா்கள் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளா்களிடம் கூட்டமாகச் சென்று வாக்குவாதங்களில் ஈடுபட மாட்டோம் என்றும் சங்க நிா்வாகிகள் மூலமே தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறி சுமூக தீா்வு காண்போம் எனவும் உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com