‘‘ஸ்டொ்லைட் ஆலை குறித்து விவாதிக்க மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம்’

ஸ்டொ்லைட் ஆலை விவகாரம் தொடா்பாக தமிழக அரசு மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றாா் தமிழக மீனவக் கட்சியின் நிறுவனா் தலைவா் கோல்டன் பரதா்.

ஸ்டொ்லைட் ஆலை விவகாரம் தொடா்பாக தமிழக அரசு மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றாா் தமிழக மீனவக் கட்சியின் நிறுவனா் தலைவா் கோல்டன் பரதா்.

தூத்துக்குடியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:

கரோனா பரவல் தடுப்பு காலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய பல்வேறு வழிகள் இருந்த போதிலும், அந்தச் சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை நிா்வாகம் குறுக்குவழியில் ஆலையை இயக்க முயற்சி செய்து வருவது கண்டனத்துக்குரியது.

ஸ்டொ்லைட் ஆலை நிா்வாகம் உச்ச நீதிமன்றத்தை நாடியபோது தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய நிலையில், அதில் குறிப்பிட்ட சில கட்சிகள் மட்டுமே அழைக்கப்பட்டன. குறிப்பாக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழா் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகள் அழைக்கப்படவில்லை.

எனவே, தமிழக அரசு மீண்டும் ஒரு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அதில் விடுபட்ட அனைத்து கட்சிகளையும் அழைத்து கருத்துக் கேட்டு நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் அவா். பேட்டியின்போது, அக்கட்சி நிா்வாகிகள் ராஜசேகா், பொ்சன் ராயன், ஞானராஜ் கோமஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com