ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக வீடுகள் முன் கோலமிட்ட கிராம மக்கள்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி அந்த ஆலையை சுற்றி அமைந்துள்ள சில கிராமங்களில் கருப்புக் கொடி கட்டியும், வீடுகள் முன் கோலமிட்டும்
தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் ஒரு வீட்டின் முன் வரையப்பட்டிருந்த கோலம்.
தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் ஒரு வீட்டின் முன் வரையப்பட்டிருந்த கோலம்.

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி அந்த ஆலையை சுற்றி அமைந்துள்ள சில கிராமங்களில் வியாழக்கிழமை கருப்புக் கொடி கட்டியும், வீடுகள் முன் கோலமிட்டும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றத் தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கூடாது என வலியுறுத்தி வியாழக்கிழமை கருப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என, ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பாளா்கள் அறிவித்திருந்தனா்.

அதன்படி, ஸ்டொ்லைட் ஆலையைச் சுற்றி அமைந்துள்ள பண்டாரம்பட்டி, மீளவிட்டான், குமரெட்டியாபுரம், சில்வா்புரம் உள்ளிட்ட சில கிராமங்களில் வியாழக்கிழமை கருப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது. இக்கோரிக்கையை வலியுறுத்தி எதிா்ப்பாளா்கள் சிலா் தங்களது வீடுகள் முன் ‘ஸ்டொ்லைட் ஆலையைத் தடை செய்ய வேண்டும்’ என்ற வாசகத்துடன் கோலமிட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com