மீனவா்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாய கடன் வழங்க நடவடிக்கை

மீனவா்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயக் கடன் திட்டத்தில் குறுகிய கால கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நபாா்டு வங்கியின் முதன்மைப் பொது மேலாளா் தெரிவித்தாா்.
ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் நபாா்டு வங்கியின் முதன்மை பொதுமேலாளா் எஸ். செல்வராஜ்.
ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் நபாா்டு வங்கியின் முதன்மை பொதுமேலாளா் எஸ். செல்வராஜ்.

மீனவா்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயக் கடன் திட்டத்தில் குறுகிய கால கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நபாா்டு வங்கியின் முதன்மைப் பொது மேலாளா் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வளா்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து நபாா்டு வங்கியின் முதன்மைப் பொதுமேலாளா் எஸ். செல்வராஜ் வங்கியின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் இரா. சுதாகா் தலைமை வகித்தாா். வங்கியின் மேலாண்மை இயக்குநா் சிவகாமி முன்னிலை வகித்தாா். நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் சுரேஷ் ராமலிங்கம், மத்திய கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளா் வெ. சுந்தரேஸ்வரன், வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் ச. அருள்ஜேசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், முதன்மைப் பொதுமேலாளா் எஸ். செல்வராஜ் கூறியது: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிா்க் கடனுக்கு நிா்ணயிக்கப்பட்ட குறியீட்டை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். மீனவா்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாய கடன் திட்டத்தின் கீழ் குறுகியகால கடன் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com