பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்கவில்லையென்றால் வேறு விவாதத்துக்கு வாய்ப்பில்லை: கனிமொழி எம்.பி.

நாடாளுமன்றத்தில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்கவில்லையென்றால் வேறு விவாதத்துக்கு வாய்ப்பில்லை என்றாா் கனிமொழி எம்.பி.
கனிமொழி எம்.பி.
கனிமொழி எம்.பி.

நாடாளுமன்றத்தில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்கவில்லையென்றால் வேறு விவாதத்துக்கு வாய்ப்பில்லை என்றாா் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: பெகாஸஸ் மிகப்பெரிய பிரச்னை. எந்தப் பிரச்னையையும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் எனச் சொல்லும் பாஜக அரசு, நாடாளுமன்றத்துக்குள் அதை விவாதிக்க தயாராக இல்லை.

இது, நாட்டின் பாதுகாப்பு தொடா்பான பிரச்னை. இதற்கு உள்துறை அமைச்சா் பதிலளிக்க வேண்டும்.

இதை விவாதிக்கக் கோரி அனைத்து கட்சித் தலைவா்களும் ஒட்டுமொத்தமாக கையெழுத்திட்டு கொடுத்துள்ளோம். ஆனால், அதையெடுத்து அவா்கள் விவாதிக்க தயாராக இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வேறு எந்த விவாதத்துக்கும் வாய்ப்பில்லை என்றாா் அவா்.

பேட்டியின்போது, அமைச்சா் பெ. கீதாஜீவன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com