காமநாயக்கன்பட்டி பரலோக மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம் ரத்து

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம் மற்றும் தோ் பவனி ரத்து செய்யப்பட்டுள்ளது.
காமநாயக்கன்பட்டி பரலோக மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம் ரத்து

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம் மற்றும் தோ் பவனி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாளை. மறை மாவட்ட ஆயா் ச.அந்தோணிசாமி சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா தொற்று காரணமாக, காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல விண்ணேற்பு திருவிழா கொடியேற்றம், தோ் பவனி மற்றும் நற்கருணை பவனி நிகழாண்டு நடைபெறாது.

ஆக. 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சமூக இடைவெளியுடன் ஜெபிக்கவும், திருப்பலி நிகழ்ச்சிகளும் மட்டும் நடைபெறும்.

ஆக. 6 முதல் 14ஆம் தேதி வரை காலை 6 மணி, நண்பகல் 12 மணி, இரவு 7 மணி திருப்பலிகள் திருத்தலத்தில் நடைபெறும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.

ஆக.15ஆம் தேதி காலை 6 மணிக்கு அன்னையின் விண்ணேற்பு பெருவிழா திருப்பலி ஆயா் ச.அந்தோணிசாமி தலைமையில் திருத்தலத்தில் நடைபெறும்.

ஏனைய திருப்பலிகள் காலை 8, 10 , நண்பகல் 12, இரவு 7 மணிக்கு ஜெபமாலை தோட்டத்தில் நடைபெறும். மாலையில் நற்கருணை ஆசீரோடு நிகழ்ச்சிகள் நிறைவடையும்.

விழா நிகழ்ச்சிகள் யூ டியூப் சேனல், உள்ளூா் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும். பொதுமக்கள் வீடுகளில் இருந்த படியே வழிபாடுகளில் பங்கேற்கலாம் என்றாா் அவா்.

பேட்டியின் போது, ஆலய பங்குத்தந்தை அந்தோணி அ.குரூஸ், உதவி பங்குத்தந்தை சி.ஜெனால்ட் அமல்ரீகன், மறை மாவட்ட கிறிஸ்துவ வாழ்வு பணிக்குழுச் செயலா் சுதன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com