ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை: கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்றாா், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடியில் புதிய பேருந்து சேவையை கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா், மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடியில் புதிய பேருந்து சேவையை கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா், மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்றாா், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: கடந்த ஆட்சியில் கரோனா பரவலின்போது, ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்த ஒரே காரணத்தால் ஸ்டொ்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் மட்டும் திறக்கப்பட்டது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு பயன்படும் அளவுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டது.

ஆனால், தற்போது ஆக்சிஜன் தேவையில்லை என்பதைத் தெளிவாக தமிழக அரசு தன் வாதத்தின் வழியாக உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைத்துள்ளது. அதனால், ஆக்சிஜன் உற்பத்தியை இனிமேலும் நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை.

கரோனா பரவலில் முன்பிருந்த மோசமான நிலை மறுபடியும் வராது. ஏனெனில், கேரளத்தில் 3ஆவது அலைக்கான அறிகுறி தெரியும்போதே, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவிட்டாா்.

அதிமுக அரசால் 10 ஆண்டுகளில் செய்ய முடியாததை, முதல்வா் மு.க.ஸ்டாலின் கிட்டத்தட்ட 100 நாள்களுக்குள் செய்துவிட்டாா். அந்தக் காழ்ப்புணா்ச்சி காரணமாகத்தான் அதிமுகவினா் போராட்டம் நடத்துகின்றனா் என்றாா் அவா்.

முன்னதாக, தூத்துக்குடி மாநகராட்சி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புதிய சாதாரண கட்டண நகர வழித்தடத்தில் இயக்கப்படும் 3 பேருந்துகளை அவா் கொடியசைத்துத் தொடக்கிவைத்து, அதில் மில்லா்புரம் வரை பயணம் செய்தாா்.

பின்னா், மில்லா்புரம் டி.எம்.பி. காலனி பகுதியில் தூத்துக்குடி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தைத் திறந்துவைத்த அவா், தூத்துக்குடி முத்துநகா் கடற்கரைப் பகுதியில் மாநகராட்சி மூலம் 5,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிகளில், சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல மேலாண்மை இயக்குநா் ராஜேஸ்வரன், பொது மேலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com