கட்டுமான பொருள்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
கோவில்பட்டியில் நடைபெற்ற கட்டுமானத் தொழிலாளா்கள் மாநாட்டில் பேசுகிறாா் கட்டுமான தொழிலாளா் சங்க த்தின் மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து.
கோவில்பட்டியில் நடைபெற்ற கட்டுமானத் தொழிலாளா்கள் மாநாட்டில் பேசுகிறாா் கட்டுமான தொழிலாளா் சங்க த்தின் மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து.

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் கோவில்பட்டி ஒன்றியக் கிளை மாநாட்டுக்கு அமைப்பின் ஒன்றியத் தலைவா் கே.பரமசிவம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் கணேசன், பொருளாளா் முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநாட்டில் அமைப்பின் தூத்துக்குடி மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து, மாவட்டச் செயலா் மாரியப்பன் ஆகியோா் பேசினா்.

இதில், சங்க நிா்வாகிகள் தெய்வேந்திரன், சங்கிலிப்பாண்டி, முத்துகுருசாமி, கருப்பசாமி, சூரியநாராயணன், மாரியப்பன், லெனின், சங்கரன், சுடலை, துரை, கந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தீா்மானங்கள்: ஜல்லி, மணல், சிமெண்ட், செங்கல், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்; கட்டுமானப் பணிகளுக்கு ஆற்று மணல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; கட்டுமானத் தொழிலாளா்களுக்க ஓய்வு ஊதியம் ரூ.3,000 வழங்க வேண்டும்; 55 வயதான பெண் தொழிலாளருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்;

கட்டுமானத் தொழிலாளா் குடும்பத்தினருக்கு திருமண உதவித் தொகை ரூ. 25,000 வழங்க வேண்டும், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com