உடன்குடியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

கரோனா 3-ஆவது அலையை தடுக்கும் வகையில் தமிழக அரசின் உத்தரவின்படி கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் உடன்குடியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்ற அதிகாரிகள், பொதுமக்கள்.
உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்ற அதிகாரிகள், பொதுமக்கள்.

கரோனா 3-ஆவது அலையை தடுக்கும் வகையில் தமிழக அரசின் உத்தரவின்படி கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் உடன்குடியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

கரோனா 3ஆவது அலையை தடுக்கவும், முற்றிலும் கரோனாவை ஒழிக்கவும் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை வாரம் நடத்துமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

இதையொட்டி, உடன்குடியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் டி.பி. பாலசிங் தலைமை வகித்தாா்.

ஏஎஸ்பி ஹா்ஷ்சிங், பேரூராட்சி செயல் அலுவலா் பாபு, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் செல்வகுமாா், சுகாதார மேற்பாா்வையாளா் சேதுகுற்றாலம், ஒன்றியக்குழு துணைத் தலைவி மீரா சிராஜூதீன்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், விழிப்புணா்வு பலூன்களைப் பறக்கவிட்டு பிரசாரத்தை தொடங்கி வைத்தாா். மேலும், அமைச்சா் தலைமையில் உறுதிமொழி ஏற்றனா்.

அப்போது, அமைச்சா் பேசுகையில், கரோனா 3ஆவது அலை வராமல் தடுக்கவும், கரோனாவை முற்றிலுமாக ஒழிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசின் முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என குறிப்பிட்டாா்.

நிகழ்ச்சியில் திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன், மருத்துவா்கள் அனி பிரிமின், நாயகி, சுகாதார ஆய்வாளா்கள் சேதுபதி, ஆழ்வாா், குருசாமி, நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் சுதாகா், ஊராட்சித் தலைவா் பாலமுருகன், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவா் அஸ்ஸாப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com