சாத்தான்குளத்தில் சுகாதார விழிப்புணா்வு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் கரோனா 3 ஆவது அலையில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து திங்கள்கிழமை பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
மூதாட்டிக்கு முகக் கவசம் வழங்குகிறாா் வட்டாட்சியா் விமலா.
மூதாட்டிக்கு முகக் கவசம் வழங்குகிறாா் வட்டாட்சியா் விமலா.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் கரோனா 3 ஆவது அலையில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து திங்கள்கிழமை பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வட்டாட்சியா் விமலா தலைமை வகித்து கரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்து, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கினாா். இதில், காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா், ஒன்றிய ஆணையாளா் பாண்டியராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேருந்து நிலையப் பகுதியில் பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. கரோனா தடுப்பு உறுதி மொழியை அனைவரும் ஏற்றனா். முகக்கவசம் அணியாதவா்களுக்கு அறிவுரைகள் வழங்கி , முகக்க கவசம் வழங்கப்பட்டது. பேருந்து நிலையத்தினுள் வரும் பேருந்துகளுக்கும், அனைத்து ஆட்டோக்களுக்கும் தொற்று நீக்க மருந்து அடிக்கப்பட்டது. இதில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மோரீஸ், மருத்துவ அலுவலா் ரேவந்த், சுகாதார ஆய்வாளா்கள் கிறிஸ்டோபா் செல்வதாஸ், ஜெயபால், வருவாய் ஆய்வாளா் மஞ்சரி, உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com