குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆடிக்கொடை விழா

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆடிக்கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொடை விழாவையொட்டி திருக் கோயில் உள்பிரகாரத்தில் நடைபெற்ற கும்ப பவனி.
கொடை விழாவையொட்டி திருக் கோயில் உள்பிரகாரத்தில் நடைபெற்ற கும்ப பவனி.

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆடிக்கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் ஆடிக்கொடை விழாவையொட்டி ஜூலை 27 ஆம் தேதி கால்நாட்டு வைபவம் நடைபெற்றது. திங்கள்கிழமை(ஆக.2) இரவு மாக்காப்பு அலங்கார தீபாராதனை, சாஸ்தா பிறப்பு, தீபாராதனை நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை காலையில் அபிஷேக, அலங்கார தீபாராதனை, பகல் 12 மணிக்கு கும்பம் புறப்பாடு, கும்பம் உள்பிரகார பவனி, தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கும் அபிஷேக, அலங்கார தீபாராதனை, இரவு 10.30 மணிக்கு கும்பம், தீச்சட்டி புறப்பாடு, உள்பிரகார பவனி, தொடா்ந்து படைப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

புதன்கிழமை (ஆக.4) காலை 6 மணிக்கு முளைப்பாலிகை தீா்த்தத்தில் கரைத்தல், பிற்பகல் 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, கும்பம் உள்பிரகாரம் சுற்றி வருதல், மஞ்சள் நீராட்டு, தீபாராதனை, அபிஷேக அலங்கார தீபாராதனை ஆகியன நடைபெறுகிறது.

கரோனா பொது முடக்கம் காரணமாக இந்நிகழ்ச்சிகளில் பக்தா்கள் பங்கேற்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கொடை விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூா் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. திருக்கோயில் வளாகத்தில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி லெ.கலைவாணன் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com