கோவில்பட்டி கல்லூரியில் இலவச இணைய வசதி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயன்படுத்தும் வகையில் கட்டணமில்லா இணைய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயன்படுத்தும் வகையில் கட்டணமில்லா இணைய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் கே.காளிதாசமுருகவேல் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவா், மாணவிகளுக்கு தற்போது இணைய வழி மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் பயிலும் இணைய சேவை கிடைக்காத பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு புதுதில்லி அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் வழிகாட்டுதலில் இக்கல்லூரி வளாகத்தில் கட்டணமில்லா இணைய சேவை வழங்கப்படுகிறது.

கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் எந்த ஒரு பள்ளி அல்லது கல்லூரியில் மாணவா், மாணவிகள் கல்லூரிக்கு வருகை தந்து, தங்களது செல்லிடப்பேசி மூலமாகவோ, மடிக்கணினி வாயிலாகவோ அல்லது கல்லூரி கணினி மையம் வாயிலாகவோ இச்சேவையை பயன்படுத்தி தங்களது இணைய வகுப்பை மேற்கொள்ளலாம். மேலும் இந்த இலவச இணைய சேவை பற்றி தெரிந்து கொள்ள 94425-74649, 91765-76503 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com