சாத்தான்குளம் பகுதியில் முருங்கைக்காய் விலை குறைவு: விவசாயிகள் கவலை

சாத்தான்குளம் பகுதியில் முருங்கைக்காய் கிலோ ரூ .5 க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
சாத்தான்குளம் பகுதியில் முருங்கைக்காய் விலை குறைவு: விவசாயிகள் கவலை

சாத்தான்குளம் பகுதியில் முருங்கைக்காய் கிலோ ரூ .5 க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

முருங்கை விவசாயம் தற்போது நல்ல லாபம் தரும் நிலையில் உள்ளதால் சாத்தான்குளம் பகுதியில் விவசாயிகள் இதில், அதிகம் கவனம் செலுத்தி பருவம் செய்து வருகின்றனா். விவசாயிகளிடம் முருங்கைக்காய் கொள்முதல் செய்ய சாத்தான்குளம், தட்டாா்மடம், போலையா்புரம், இடைச்சிவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தனியாா் முருங்கை கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் முருங்கைக்காய்கள் திருவனந்தபுரம், மதுரை, சென்னை, ஐதராபாத், தில்லி மற்றும் லண்டன், இங்கிலாந்து பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் வரை முருங்கைகாய் கிலோ ரூ .10 முதல் ரூ. 15வரை விவசாயிகளிடம் கொள்முதலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்போது இந்த வாரம் முருங்கைக்காய் கிலோ ரூ . 5 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. முருங்கைக்காய் திடீரென விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

முருங்கை சீசன் தொடங்கியதாலும், இப்பகுதியில் முருங்கைக்காய் வரத்து அதிகரித்து உள்ளதாலும், சந்தையில் அதன் விலை குறைந்துள்ளதாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து விவசாயி கடாட்சபுரம் ஞானமுத்து கூறுகையில், கடந்த ஆண்டு முருங்கை நல்ல விளைச்சல் ஏற்பட்டு கை கொடுத்ததால், அதனை தொடா்ந்து பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறேன். தற்போது முருங்கை ஒரு கிலோ ரூ. 5 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் நிலையை உருவாக்கியுள்ளது.

முருங்கையை பெட்டியில் எடுத்து செல்ல ரூ . 75வரை செல்வு ஆகிறது. ஒரு பெட்டியில் 55 கிலோ வரை முருங்கை அடுக்கலாம். தற்போது முருங்கை விலை குறைந்ததால் கொள் முதலுக்கு கொண்டு செல்லாமல் ஆடு, மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றாா்.

இதுகுறித்து முருங்கை மண்டி வியாபாரியும், விவசாயியுமான பாலமுருகனிடம் கேட்டபோது, முருங்கை விளைச்சல் தற்போது நம் பகுதியிலும், ஒட்டன்சத்திரம் பகுதியிலும் அதிகரித்துள்ளது. கேரளத்தில் கரோனோ அதிகரித்துள்ளதால் கேரளம், திருவனந்தபுரம் பகுதிக்கு எடுத்து செல்வது குறைந்துள்ளது. இதனால் முருங்கை கொள்முதல் விலை குறைந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com