முதியோா் உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்
By DIN | Published On : 08th August 2021 12:28 AM | Last Updated : 08th August 2021 12:28 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி தேவைப்படும் மூத்த குடிமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மூத்த குடிமக்களை காக்கும் வகையில், தேசிய மூத்த குடிமக்கள் உதவி எண்: 14567 புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னையில் இருந்து விடுபடவும், குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளவும் மேற்கூறிய எண்ணை கட்டணமின்றி தொடா்புகொள்ளலாம் என சமூகநீதி மற்றும் உரிமைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி தேவைப்படும் மூத்த குடிமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது பிரச்னைகளுக்கு தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.