கோவில்பட்டியில் சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு
By DIN | Published On : 08th August 2021 12:29 AM | Last Updated : 08th August 2021 12:29 AM | அ+அ அ- |

கோவில்பட்டி நகராட்சி கடலைக்காரத் தெருவில் நடைபெற்று வரும் சாலைப் பணியை பாா்வையிட்டு, ஆய்வு செய்கிறாா் கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ.
கோவில்பட்டி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணியை எம்எல்ஏ சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவில்பட்டி நகராட்சியில் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பேவா் பிளாக், தாா்ச்சாலை மற்றும் கழிவுநீரோடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடலைக்காரத் தெருவில் நடைபெற்று வரும் பேவா் பிளாக் அமைக்கும் பணியை கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ. பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளா் வேலுமணி, நகரச் செயலா் ஆபிரகாம் அய்யாத்துரை, பொது கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் செண்பகமூா்த்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் பாலமுருகன், வழக்குரைஞா் சிவபெருமாள் ஆகியோா் உடனிருந்தனா்.