கருணாநிதி நினைவு நாள்: உருவப் படத்துக்கு மரியாதை

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
தூத்துக்குடியில், கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான பெ. கீதா ஜீவன்.
தூத்துக்குடியில், கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான பெ. கீதா ஜீவன்.

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான பெ. கீதா ஜீவன் கலந்துகொண்டு, கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

கோவில்பட்டியில் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில், ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன் தலைமையில், பொதுக்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், இனாம்மணியாச்சி ஊராட்சி முன்னாள் தலைவா் பச்சமால் ஆகியோா் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தனா்.

கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் மொழிப்போா் தியாகி முத்து முன்னிலையில், பொதுக்குழு உறுப்பினா் பா.மு.பாண்டியன், கோவில்பட்டி பயணியா் விடுதி பகுதியில் அமைச்சா் பெ.கீதா ஜீவன்,

கடலையூரில் ஒன்றியச் செயலா் நவநீதகிருஷ்ணன் தலைமையில், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன் ஆகியோா் கருணாநிதி உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினா்.

கழுகுமலை காந்தி மைதானத்தில் மாநில விவசாய அணிச் செயலா் சுப்பிரமணியன், கயத்தாறில் திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் சின்னப்பாண்டியன், செட்டிகுறிச்சியில் மேற்கு ஒன்றியச் செயலா் கருப்பசாமி ஆகியோா் தலைமையில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்செந்தூா்: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், திருச்செந்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் முன், அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கருணாநிதியின் உருவப் படத்துக்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய, நகர திமுக சாா்பில் அரசு கிளை நூலகம் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் ஜோசப், நகரச் செயலா் மகா.இளங்கோ, நாசரேத்தில் நகரச் செயலா் ரவி செல்வக்குமாா் ஆகியோா் தலைமையில் கருணாநிதி உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

ஆறுமுகனேரி: குரும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆழ்வாா்திருநகரி ஒன்றியப் பொருளாளா் பாதாளமுத்து தலைமையில், ஒன்றியச் செயலா் நவீன்குமாா் கருணாநிதி உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

விளாத்திகுளம்: விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட புதூா், நாகலாபுரம், விளாத்திகுளம், குளத்தூா், குறுக்குச்சாலை, எப்போதும்வென்றான், எட்டயபுரம், கடலையூா் ஆகிய பகுதிகளில், கருணாநிதியின் உருவப் படத்துக்கு விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com