தூத்துக்குடியில் மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட படகுகள்.
தூத்துக்குடியில் மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட படகுகள்.

புதிய மீன்பிடி சட்டத்திருத்த மசோதா: தூத்துக்குடியில் மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்

மத்திய அரசின் புதிய மீன்பிடி சட்டத்திருத்த மசோதா 2021 கண்டித்தும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய மீன்பிடி சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய கோரியும்

மத்திய அரசின் புதிய மீன்பிடி சட்டத்திருத்த மசோதா 2021 கண்டித்தும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய மீன்பிடி சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய கோரியும் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 


தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் மீன்பிடி சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக என்று கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ரீகன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், வேலை நிறுத்த போராட்டத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகுகள் மூலம் அரசு கிடைக்கும் ஒருநாள் வருமானம் சுமார் ரூ.4 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com