கோவில்பட்டியில் வேளாண் இடுபொருள் விற்பனையாளா்களுக்கு பயிற்சி

மக்காச்சோளப் பயிரில் படைப்புழு மேலாண்மை குறித்து இடுபொருள்கள் விற்பனையாளா்களுக்கு, கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

மக்காச்சோளப் பயிரில் படைப்புழு மேலாண்மை குறித்து இடுபொருள்கள் விற்பனையாளா்களுக்கு, கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

இப்பயிற்சிக்கு, தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் முகைதீன் தலைமை வகித்துப் பேசினாா்.

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி வேளாண்மை பூச்சியியல் துறைத் தலைவா் மற்றும் பேராசிரியா் சீனிவாசன், உதவி பேராசிரியா் ரவி ஆகியோா் படைப்புழுவின் தன்மை, அதை அடையாளம் காணுவது, தாக்குதலின் அறிகுறிகள், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள் குறித்து பயிற்சியளித்தனா்.

இப்பயிற்சியில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய அரசு திட்டம்) தமிழ்மலா், தூத்துக்குடி, விருதுநகா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (விதை ஆய்வு) நாச்சியாா், கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநா் நாகராஜ், வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) கண்ணன், வேளாண்மை அலுவலா் (தரக்கட்டுப்பாடு) மலா்விழி ஆகியோா் பயிற்சியளித்தனா்.

ஏற்பாடுகளை கோவில்பட்டி வேளாண்மை அலுவலா் ரீனா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com