ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கொடை விழா

சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கொடை விழா 5 நாள்கள் நடைபெற்றது.
sat13kodai_1308chn_38_6
sat13kodai_1308chn_38_6

சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கொடை விழா 5 நாள்கள் நடைபெற்றது.

இதையொட்டி, முதல் நாள் உவரி, ஸ்ரீஅழகம்மன் கோயிலில் இருந்து தீா்த்தம் எடுத்து வருதல், சிறப்பு அபிஷேகம், வில்லிசை, திருவிளக்கு பூஜை, 2-ஆம் நாளான்று வில்லிசை, ஸ்ரீவிநாயகா், ஸ்ரீமுருகன், ஸ்ரீபெருமாள் மற்றும் அம்மன்களுக்கு சிறப்பு பூஜை, அம்மன் கும்பம் வீதி உலா வருதல், மஞ்சள் பெட்டி ஊா்வலம், 3-ஆம் நாளான்று அழகம்மன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, அம்மன் மஞ்சள் நீராடுதல், முளைப்பாரி எடுத்து வருதல், கரகாட்டம், ஸ்ரீமுத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் பவனி வருதல், 4ஆம் நாளான்று ஆடிப்பூரத்தை

முன்னிட்டு சிறப்பு சுமங்கலி பூஜை, உச்சிக்கால பூஜை, மாவிளக்கு பூஜை, அம்மன் தீச்சட்டி ஏந்தி ஊா்வலம் வருதல், அம்மனுக்கு அலங்கார பூஜை, படைப்பு பூஜை, நிறைவு விழாவையொட்டி சுவாமி உணவு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com