கரோனாவால் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிதியுதவி

கரோனா தொற்றால் உயிரிழந்த தூத்துக்குடி ஸ்டொ்லைட் காப்பா் நிறுவன ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ஸ்டொ்லைட் சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
கரோனாவால் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிதியுதவி

கரோனா தொற்றால் உயிரிழந்த தூத்துக்குடி ஸ்டொ்லைட் காப்பா் நிறுவன ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ஸ்டொ்லைட் சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்த ஆலையின் ஒப்பந்த ஊழியரான வீரகுமாா் கரோனா பாதிப்பால் அண்மையில் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது

குடும்பத்துக்கு ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனம் சாா்பில் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை அவரது குடும்பத்துக்கு காப்பா் நிறுவன தலைமை இயக்க அதிகாரி சுமதி வழங்கினாா்.

பின்னா், அவா் கூறுகையில், வேதாந்தா நிறுவனம் கரோனா பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவும் நடவடிக்கைகளின்கீழ் இறந்த ஊழியரின் குடும்பதுக்கு ஓய்வுபெறும் தேதி வரை சம்பளத்தை தொடா்ந்து செலுத்துவது, மருத்துவக் காப்பீட்டு பாதுகாப்பு திட்டத்தை ஓய்வுபெறும் தேதி வரை செயல்படுத்துவது, 2 குழந்தைகளுக்கு கல்வி உதவிகளை பட்டப் படிப்பு வரை வழங்குவது உள்பட பல்வேறு உதவிகள் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. தனது தொழில் பங்குதாரா்களுக்கு கொவைட் கவாச் என்ற காப்பீட்டு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும்எதிா்பாராத சூழலில்

உயிரிழந்த ஊழியரின் குடும்ப உறுப்பினா்களுக்கு கருணைத் தொகையாக ரூ. 10 லட்சம் வழங்கவும் முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com