தட்டப்பாறை - மீளவிட்டான் இரட்டை ரயில்பாதை பணிகள்: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு 

தட்டப்பாறை - மீளவிட்டான் ரயில் நிலையங்கள் இடையே அமைக்கப்பட்டுள்ள இரட்டை அகல ரயில் பாதையினை பெங்களூர் தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
இரட்டை ரயில்பாதை பணிகளை ஆய்வு செய்யும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர்.
இரட்டை ரயில்பாதை பணிகளை ஆய்வு செய்யும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர்.

வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி ரயில்வே பிரிவில் தட்டப்பாறை - மீளவிட்டான் ரயில் நிலையங்கள் இடையே அமைக்கப்பட்டுள்ள இரட்டை அகல ரயில் பாதையினை பெங்களூர் தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

இந்த 7 கிமீ ரயில் பாதையில் நான்கு சிறிய பாலங்கள், மீளவிட்டான் அருகில் உள்ள ஒரு பெரிய ரயில் மேம்பாலம், இடது பக்க வளைவு ரயில் பாதை, மின்சார வயர் கிராசிங், மின்மயமாக்கல் பணிகள், ரயில் பாதை இணைப்புகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. 

ஆய்வு பணியின்போது மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பி.ஆனந்த், ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட இயக்குநர் கமலாகர ரெட்டி, கட்டுமான முதன்மை பொறியாளர் தவமணி பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com