விவசாயிகளுக்கு பாரம்பாரிய நெல் வகைகள் குறித்த பயிற்சி
By DIN | Published On : 22nd August 2021 05:21 AM | Last Updated : 23rd August 2021 02:45 AM | அ+அ அ- |

பயிற்சியில் பங்கேற்றோா்.
சாத்தான்குளம் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான பயிற்சி தோப்பூரில் நடைபெற்றது.
வேளாண் உதவி இயக்குநா் சுதாமதி தலைமை வகித்துப் பேசினாா். வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநா் முருகன், உதவி வேளாண்மை அலுவலா் சிவராமன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
இதில், தோப்பூா் கிராமத்தைச் சோ்ந்த 40 விவசாயிகள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை அட்மா திட்டப் பணியாளா்கள் ருக்மணி, நளினி ஆகியோா் செய்திருந்தனா்.