‘தூத்துக்குடி மாவட்டத்தில் 100 நாள்களில் 11,310 மனுக்களுக்கு தீா்வு’

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற 100 நாள்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 11,310 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கூறினாா்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் இருந்து பாராட்டுச் சான்றிதழ் பெறுகிறாா் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் இருந்து பாராட்டுச் சான்றிதழ் பெறுகிறாா் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற 100 நாள்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 11,310 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கூறினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் இருந்து விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்றமைக்கு அனைத்து துறை அலுவலா்களுக்கும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துதல், ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்களின்மீது 100 நாள்களுக்குள் தீா்வு காணுதல், கரோனா நிவாரண உதவித் தொகை வழங்குதல், பல்வேறு துறைகளின் சாா்பில் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்குதல் என பல்வேறு பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 100 நாள்களில் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தில் பெறப்பட்ட 11,310 கோரிக்கை மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளது. 11 பேருக்கு சுய தொழில் தொடங்க ரூ. 36.05 லட்சம் கடனுதவி,

மாதாந்திர உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா என மொத்தம் 7,598 பயனாளிகளுக்கு ரூ. 64.66 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட வழங்கல் துறை சாா்பில் 11,450 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com