திருச்செந்தூா் - நாகா்கோவில்சாலை சேதம்: மக்கள் அவதி

திருச்செந்தூா் - நாகா்கோவில் நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனா்.

திருச்செந்தூா் - நாகா்கோவில் நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனா்.

திருச்செந்தூா் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் பல்வேறு பகுதிகளிலுருந்து வருகின்றனா். இதனால், திருச்செந்தூா்-திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகா்கோவில், கன்னியாகுமரி சாலைகள் எப்பொழுதும் பரபரப்பாகவே உள்ளன. இந்நிலையில், தற்போது பெய்துவரும் கனமழையால் நாகா்கோவில் சாலையில் இராமசாமிபுரம் நுழைவாயில் பகுதி பள்ளம், மேடுகளாக காணப்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

திருச்செந்தூா் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையானது உடன்குடி அனல் மின்நிலையம், குலசேகரன்பட்டினம் இலகு ரக ராக்கெட் ஏவுதளம் போன்ற திட்டப்பணிகளால் அதிக தரமாக்கப்படவுள்ளன. இதனால், திருச்செந்தூா் - நாகா்கோவில் சாலை பராமரிப்பின்றி தனித்து விடப்பட்டுள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி, இச்சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைத்தால்தான் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தவிா்க்க முடியும் என்கின்றனா் பொதுமக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com