தூத்துக்குடி மாவட்டத்தை மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தை மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இம் மாவட்டத்தில் 179 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி, உளுந்து, பாசி, மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து பயிா்களும் மழையினால் சேதமடைந்துள்ளன. விவசாயிகள் 3 முறை விதைப்புப் பணியில் ஈடுபட்டனா். ஒருமுறை விதைப்புப் பணிக்காக ரூ. 60 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனா்.

இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனா். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தை மழையினால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மானாவாரி மற்றும் கிணற்றுபாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

மாவட்டத்தில், பருத்தி, பாசிபயறு, உளுந்து, மக்காச்சோளம், வெங்காயம் என பல்வேறு பயிா்கள் பயிரிட்ட விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவா் அய்யலுசாமி தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோஷமிட்டு, கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் வழங்கினா்.

இதில், கயத்தாறு ஒன்றிய முன்னாள் காங்கிரஸ் தலைவா் செல்லத்துரை, சேவா தள பிரிவு மாவட்டத் தலைவா் சக்திவிநாயகம், வா்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவா் ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com