முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
ஆறுமுகனேரியில் 22 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
By DIN | Published On : 10th December 2021 12:37 AM | Last Updated : 10th December 2021 12:37 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரியில் இளைஞரை போலீஸாா் கைதுசெய்து, அவரிடமிருந்து 22 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
ஆறுமுகனேரி, ராஜமன்னியபுரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (27). அப்பகுதியில் மளிகைக் கடை நடத்திவருகிறாா். அவரது கடையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக ஆறுமுகனேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், போலீஸாா் சென்று, சோதனையிட்டபோது, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
அவரை போலீஸாா் கைதுசெய்து, 22 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து உதவி ஆய்வாளா் அமலோற்பவம் விசாரித்து வருகிறாா்.