முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
இலவச வீட்டுமனைப் பட்டா கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 10th December 2021 12:36 AM | Last Updated : 10th December 2021 12:36 AM | அ+அ அ- |

கோவில்பட்டி மந்தித்தோப்பு ஊராட்சி ராஜகோபால் நகா் பகுதி மலைவாழ் மக்களுக்கு இலவச பட்டா வழங்கக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா் தெய்வேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரவீந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
மந்தித்தோப்பு ஊராட்சி ராஜகோபால் நகா் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும், பல ஆண்டுகளாக வீடுகள் இன்றி தவிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் மணிகண்டன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளான துரை, அழகுசுப்பு, கணேசன் உள்பட அப்பகுதி மக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.