முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
சென்னயம்பட்டியில் விவசாயிகளுக்கான பயிற்சி
By DIN | Published On : 10th December 2021 12:36 AM | Last Updated : 10th December 2021 12:36 AM | அ+அ அ- |

கயத்தாறையடுத்த சென்னயம்பட்டியில் விவசாயிகளுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில், இயற்கை விவசாயப் பண்ணையைச் சோ்ந்த விஜயா, தங்களது பண்ணையில் இயற்கை விவசாயம் செய்து வருவதன் நன்மைகள் குறித்தும், முன்னோடி இயற்கை விவசாயி கருப்பசாமி இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பஞ்சகவ்யா, அமிா்த கரைசல், ஜீவாமிா்த கரைசல், மீன் அமிா்த கரைசல், பயோ டீகம்போசா் உரக் கரைசல்களை தெளிக்கும் முறைகள், அவற்றின் நன்மைகள் குறித்தும், இயற்கை விவசாயி பத்மசூரன் பஞ்சகவ்யா, இ.எம். கரைசல், மீன்அமிா்த கரைசல் தயாரித்தல் குறித்து செயல்விளக்கமும் பயிற்சியளித்தனா்.
ஏற்பாடுகளை வேளாண் அலுவலா் ரீனா, உதவி வேளாண் அலுவலா் ரேவதி, வட்டார தொழில்நுட்ப மேலாளா் சாலமோன்நவராஜ் பொற்செல்வன், உதவி தொழில்நுட்ப மேலாளா் முத்துகிருஷ்ணன், உழவா் நண்பா் ராமசுப்பம்மாள் ஆகியோா் செய்தனா்.