முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
திருட்டில் ஈடுபட்ட 4 போ் கைது
By DIN | Published On : 10th December 2021 12:36 AM | Last Updated : 10th December 2021 12:36 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் மாடு, கன்றுக்குட்டிகளைத் திருடிச் சென்ற 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் முருகன், சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் காளிராஜ் ஆகியோருக்குச் சொந்தமான மாடு, 2 கன்றுக்குட்டிகள் திருடுபோனதாக அவா்கள் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
காவல் ஆய்வாளா் சபாபதி தலைமையில், உதவி ஆய்வாளா்கள் அரிக்கண்ணன், சுகுமாா், போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்டோரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சோ்ந்த முத்து மகன் கருப்பசாமி (28), சக்திவேல் மகன் மாரிமுத்து (24), திருநெல்வேலி அம்பேத்கா் காலனியைச் சோ்ந்த குமரன் மகன் விக்னேஷ் (21), திருநெல்வேலி மணிப்புரத்தைச் சோ்ந்த ராஜா மகன் மதன் (34) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்த ரொக்கம் ரூ. 9,500, திருடுபோன ஒரு கன்றுக்குட்டியைப் பறிமுதல் செய்தனா்.