எழுத்தாளா் கி.ரா. நினைவரங்கம்கட்டும் பணி நாளை தொடங்கும்: அமைச்சா் கீதாஜீவன் தகவல்

மறைந்த எழுத்தாளா் கி.ரா.வுக்கு நினைவரங்கம் கட்டும் பணி சனிக்கிழமை (டிச.11) தொடங்கும் என்றாா் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன்.

மறைந்த எழுத்தாளா் கி.ரா.வுக்கு நினைவரங்கம் கட்டும் பணி சனிக்கிழமை (டிச.11) தொடங்கும் என்றாா் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன்.

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் அவரது சிலையுடன் கூடிய நினைவரங்கம் கட்டப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இதையொட்டி, கோவில்பட்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 45 சென்ட் இடத்தில் ரூ.150.70 லட்சம் மதிப்பில் நினைவரங்கம் மற்றும் முழு உருவச்சிலை அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டிருந்தது. அந்த இடத்தை அமைச்சா் கீதாஜீவன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் எழுத்தாளா் கி.ரா.வுக்கு சுமாா் 2,400 சதுர அடியில் நினைவரங்கம் கட்டும் பணி சனிக்கிழமை தொடங்கப்படவுள்ளது.

இதில், கனிமொழி எம்.பி., தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் கலந்து கொள்கின்றனா். நினைவரங்க வளாகத்தில் மறைந்த எழுத்தாளரின் முழு உருவச்சிலையும் அமைக்கப்படவுள்ளது என்றாா்.

ஆய்வின் போது, பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா்கள் பரமசிவன், சரத்குமாா், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பொறியாளா் சங்கரசுப்பிரமணியன், ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com