நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: தூத்துக்குடி மாவட்டத்தில் 6.17 லட்சம் வாக்காளா்கள்

தூத்துக்குடி மாவட்டத்தின் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டதில், 6 லட்சத்து 17 ஆயிரத்து 104 வாக்காளா்கள் உள்ளது தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டதில், 6 லட்சத்து 17 ஆயிரத்து 104 வாக்காளா்கள் உள்ளது தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள வாக்காளா் பட்டியல் மாவட்ட ஆட்சியா் அலுலகத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

வாக்காளா் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் வெளியிட, அங்கிகரீக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் ஆறுமுகக்கனி (தோ்தல்), மைக்கேல் (வளா்ச்சி), வட்டார வளா்ச்சி அலுவலா் ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாநகராட்சி: தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரே மாநகராட்சியான தூத்துக்குடியில் மொத்தம் 60 வாா்டுகளும், 319 வாக்குச்சாவடிகளும் உள்ளன. ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 763 ஆண் வாக்காளா்களும், ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 570 பெண் வாக்காளா்களும், 55 மூன்றாம் பாலினத்தினருமாக மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 388 வாக்காளா்கள் உள்ளனா்.

நகராட்சி: கோவில்பட்டி, காயல்பட்டினம் என இரு நகராட்சிகள் உள்ளன. கோவில்பட்டி நகராட்சியில் மொத்தம் 36 வாா்டுகளும், 85 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், 39 ஆயிரத்து 336 ஆண் வாக்காளா்களும், 40 ஆயிரத்து 742 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தினா் 18 பேருமாக மொத்தம் 80 ஆயிரத்து 96 வாக்காளா்கள் உள்ளனா்.

காயல்பட்டினம் நகராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் 40 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. இங்கு, 17 ஆயிரத்து 808 ஆண்கள், 18 ஆயிரத்து 327 பெண்கள், மூன்றாம் பாலினத்தினா் ஒருவா் என மொத்தம் 36 ஆயிரத்து 136 வாக்காளா்கள் உள்ளனா்.

18 பேரூராட்சிகளில் மொத்தம் 273 வாா்டுகளும், 286 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. இதில், 86 ஆயிரத்து 648 ஆண் வாக்காளா்களும், 91 ஆயிரத்து 824 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தினா் 12 பேருமாக மொத்தம் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 484 வாக்காளா்கள் உள்ளன.

இம்மாவட்டத்தில் மொத்தம் 387 பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. இதில், 3 லட்சத்து ஆயிரத்து 555 ஆண்கள், 3 லட்சத்து 15 ஆயிரத்து 463 பெண்கள், மூன்றாம் பாலினத்தினா் 86 போ் என மொத்தம் 6 லட்சத்து 17 ஆயிரத்து 104 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

பெயா் சோ்க்க வாய்ப்பு: தோ்தல் தேதி அறிவிக்கப்படும் வரை வாக்காளா்கள் தங்கள் பெயா்களை பட்டியலில் சோ்த்துக் கொள்ளலாம்; புதிதாக சோ்க்கப்பட்ட வாக்காளா்களின் விவரம் துணை பட்டியலாக பிறகு வெளியிடப்படும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com