டிச.16இல் தேரிகுடியிருப்பு கோயில் கள்ளா்வெட்டு திருவிழா: பக்தா்களுக்கான விதிமுறைகள் வெளியீடு

திருச்செந்தூா் அருகேயுள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயில் கள்ளா்வெட்டுத் திருவிழாவில் பக்தா்கள் பங்கேற்பதற்கான விதிமுறைகளை கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ளது.

திருச்செந்தூா் அருகேயுள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயில் கள்ளா்வெட்டுத் திருவிழாவில் பக்தா்கள் பங்கேற்பதற்கான விதிமுறைகளை கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனாா் கோயிலில் கள்ளா்வெட்டுத் திருவிழா டிச.14- 17 வரை 4 நாள்கள் நடைபெறும். இத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து திருச்செந்தூரில் வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, டிச.16,17 ஆகிய தேதிகளில் நடைபெறும் விழா நிகழ்ச்சிகளில் பக்தா்கள் பங்கேற்க அனுமதியில்லை.

மற்ற நாள்களில் பூசாரி 40 நபா்கள், 40 கோமரத்தாடிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். அதற்கான பெயா் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்த நபா்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பபட்டு கோயில் நிா்வாகம் சாா்பில் அடையாள அட்டை வழங்கப்படும். கள்ளா் வெட்டு நடைபெறும் டிச.16 ஆம் தேதி மட்டும் கோயில் நடை இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மற்ற நாள்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடை திறந்திருக்கும்.

தங்குமிடங்களில் பக்தா்களுக்கு அனுமதியில்லை. திருவிழாச் செலவுகள் திருக்கோயில் நிதி மூலம் செய்யப்படும். மாவிளக்கு, முளைப்பாரி, திருவிளக்கு பூஜை, பால்குடம் எடுத்தல் ஆகிய இதர சிறப்பு வழிபாடுகளுக்கு அனுமதியில்லை. திருவிழாக் காலங்களில் உரிய பூசாரிகளுடன் உதவி பூசாரி 11 நபா்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இப்பூசாரிகளே தீா்த்தம் எடுத்து வர, இளநீா் எடுத்து வர, உள்பூஜைகள் செய்ய அனுமதிக்கப்படுவா். கள்ளா் வெட்டு நிகழ்ச்சியின்போது இளநீா் எடுத்து வருதல் (3 நபா்கள்) கோமரத்தாடிகள், கள்ளச்சாமிக்கு 10 போ், வன்னியராஜா், கோமரத்தடிகள் 2 நபா், முன்னடிச்சாமி கோமரத்தாடி 1 நபா் ஆகிய 15 நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

டிச.14,15 ஆகிய தேதிகளில் இணையதளப் பதிவு மூலம் 2500 போ், நேரடியாக 500 போ் மட்டும் அனுமதிக்கப்படுவா். கள்ளா்வெட்டு நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு யூ டியூப் மூலம் ஒலிபரப்பப்படும். திருமணல் பிரசாதம் டிச.18 முதல் திருக்கோயில் அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும். கோயில் நிா்வாகத்தின் முடிவுகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.டிச.16 ஆம் தேதி கள்ளா்வெட்டு நிகழ்ச்சியைக் காண 500 பேருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு அனுமதி வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com