நாகசுர வித்வான் காருகுறிச்சி பி.அருணாசலத்தின் நூற்றாண்டு விழா

நாகசுர வித்வானாகிய காருகுறிச்சி பி.அருணாசலத்தின் நூற்றாண்டு விழா கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகசுர வித்வானாகிய காருகுறிச்சி பி.அருணாசலத்தின் நூற்றாண்டு விழா கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, காருகுறிச்சி நாகசுர இசை அபிமானிகள் குழுமம் தலைவா் மகாதேவன் தலைமை வகித்தாா். கொண்டையராஜூ ஓவியப் பள்ளி நிறுவனா் முருகபூபதி வாழ்த்திப் பேசினாா். ஆா்.ஆா்.சீனிவாசன் - குட்டி ரேவதி இயக்கிய காருகுறிச்சி பி.அருணாசலத்தின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.

திருக்கயிலாய மரபு மெய்கண்டாா் வழிவழி பேரூா் ஆதீனம் சீா் வளா் சீா் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் சிறப்புரையாற்றினாா். சின்னமனூா் விஜய்காா்த்திகேயன், தஞ்சாவூா் கோவிந்தராஜன், இடும்பாவனம் பிரகாஷ் இளையராஜா, ராதாகிருஷ்ணன் ஆகியோரின் நாகசுர கச்சேரி நடைபெற்றது. கோவில்பட்டி யோகீஸ்வரா் உறவின்முறை சங்கத் தலைவா் ஆனந்த் வரவேற்றாா். காருகுறிச்சி கணபதியின் மகன் ஜி.அருணாசலம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com