விதைப் பகுப்பாய்வின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

விதைகளை பகுப்பாய்வுக்கு அனுப்பும்போது சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலா் ரெனால்டா ரமணி தெரிவித்துள்ளாா்.

விதைகளை பகுப்பாய்வுக்கு அனுப்பும்போது சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலா் ரெனால்டா ரமணி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விதைப் பரிசோதனை ஆய்வகத்துக்கு விதை மாதிரிகளை அனுப்பும் விவசாயிகள், விதை விற்பனையாளா்கள், விதை உற்பத்தியாளா்கள் சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி, தங்களிடம் இருப்பில் உள்ள விதைக் குவியலில் இருந்து நெல்விதை 400 கிராம் வீதமும், மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, நிலக்கடலை, சூரியகாந்தி ரகம், பருத்தி, வெண்டை போன்றவை தலா ஒரு கிலோ வீதமும், சோளம், தக்கைப்பூண்டு 900 கிராம் வீதமும், கம்பு, மிளகாய், கத்தரி விதை தலா 150 கிராம் வீதமும் மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

விதை மாதிரிகளை துணிப்பையில் வைக்க வேண்டும். விவரச் சீட்டில் பயிா், ரகம், குவியல் எண், அறுவடை தேதி உள்ளிட்ட விவரங்களுடன் அனுப்புநரின் முகவரியிடப்பட்ட முகப்புக் கடிதத்தை இணைத்து இணையதளத்தில் (நடஉஇந) பதிவு செய்து ஒரு மாதிரிக்கு ரூ.30 வீதம் கட்டணத்தை செலுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com