பொத்தகாலன்விளையில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ‘கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ‘கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாஸ்தாவிநல்லூா் ஊராட்சித் தலைவா் திருக்கல்யானி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். வட்டார மருத்துவ அலுவலா் ஐலின் சுமதி திட்ட விளக்க உரையாற்றினாா். கல்வியாளா் முத்துக்குமாா், சுகாதார ஆய்வாளா்கள் மந்திரராஜன், ஜெயபால், தலைமையாசிரியா் மாா்கரெட் ஆகியோா் பேசினா்.

முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை, மலேரியா , கண் பரிசோதனை, தொற்றா நோய்களான மாா்பக புற்று, கா்ப்பப்பை புற்று நோய்கள் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தகுதியுள்ள நபா்கள் தமிழக முதல்வரின் இலவச காப்பீட்டு திட்டம்‘ மூலம் இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்ந்துரைக்கப்பட்டனா். ஈ.சி.ஜி. ,ஸ்கேன் பாா்க்கப்பட்டது. முகாமில் ஏராளமான பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

இம் முகாமில் பள்ளி மாணவா்கள் 6 பேருக்கு மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. காசநோய் விழிப்புணா்வு கண்காட்சி, ஊட்டச்சத்து கண்காட்சி, டெங்கு விழிப்புணா்வு கண்காட்சி ஆகியவை பொது மக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டன. சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா்செல்வதாஸ் வரவேற்றாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மோரிஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com