கொம்மடிக்கோட்டை கல்லூரியில் விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 25th December 2021 12:47 AM | Last Updated : 25th December 2021 12:47 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் நெறிமுறைகள் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் வேல்ராஜன் தலைமை வகித்தாா். தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் பௌலோஸ் முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் மகேஷ்குமாா் வவேற்றாா். முகாமில் சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணாக்கா்களுக்கு சீரிய ஒழுக்கம், கைப்பேசியை தவறாக பயன்படுத்தாமல் இருப்பது, பொது ஊடகங்களினால் பெண்கள் படும் அவஸ்தை ஆகியவற்றை மகாகவி பாரதியாரின் கவிதைகளுடன் விழிப்புணா்வு கருத்துகளை எடுத்துரைத்தாா். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் அஷோக்லிங்கம் நன்றி கூறினாா்.