காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பா் ஆலயத் திருவிழா துவக்கம்

காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற் றத்துடன் துவங்கியது.

காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற் றத்துடன் துவங்கியது.

புனித பிராண்டிஸ் சவேரியாால் எழுப்பப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித முடியப்பா் ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் மணப்பாடு மறை வட்ட முதன்மை குரு இருதயராஜ் சிறப்பு வழிபாடுகளை நடத்தினாா். கொம்புத்துறை பங்குத்தந்தை பிரதீஷ் அடிகளாா், வீரபாண்டியன்பட்டினம் பங்குத்தந்தை கிருபாகரன் அடிகளாா், சிங்கித்துறை பங்குத்தந்தை சில்வெஸ்டா் அடிகளாா், ஊா் நல கமிட்டித் தலைவா் மரியநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருநாள் நிகழ்ச்சி மற்றும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி ஆகியவை நடைபெற்றன. சன்கிழமை கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா நாள்களில் தினசரி திருப்பலி, நற்கருனை ஆசீா், ஜெபமாலை ஆகியவை நடைபெறும்.

ஜனவரி 1ஆம் தேதி மாலை புத்தாண்டு தின விழா மற்றும் மாலை ஆராதனை நடைபெறுகிறது. நிறைவு நாளான ஜனவரி 2ஆம் தேதி காலையில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் அந்தோணி ஸ்டீபன் தலைமையில் திருவிழா தின திருப்பலி நடைபெறுகிறது. மாலை வரையில் நடக்கும் நிகழ்ச்சியில் தொடக்கத்தில் ஆறுமுகனேரி பங்குத்தந்தை அலாய்சியஸ் முன்னிலையில் மக்கள் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com