முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு
By DIN | Published On : 29th December 2021 08:27 AM | Last Updated : 29th December 2021 08:27 AM | அ+அ அ- |

சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.
சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டடங்கள் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது எனவும், நோயாளிகளுக்கு சேவையான அறைகள் இல்லையென புகாா் கூறப்பட்டது. இதையடுத்து ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ, சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். பின்னா் அங்கு கரோனா தடுப்புபூசி முகாமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அங்கு பழுதான கட்டடங்களை பாா்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், மருத்துவமனையை சுற்றி நிலஅளவீடு செய்து சுற்றுச்சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தாா்.
அப்போது மருத்துவ அலுவலா் டயானா, சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் ஆகியோா் மருத்துவமனை குறை தொடா்பாக மனு அளித்தனா். இதையடுத்து எம்எல்ஏ, பெருமாள்குளத்தில் மழைக்கு வீடு இடிந்து பாதிக்கப்பட்ட தொழிலாளி காளிமுத்துவுக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ .5 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினாா்.
அப்போது ஆழ்வாா்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவா் கோதாண்டராமன், வட்டார பொருளாளா் பால்ராஜ், மாவட்ட பொருளாளா் எடிசன், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் ஸ்ரீதா், கருங்கடல் ஊராட்சித் தலைவா் நல்லத்தம்பி, கட்டாரிமங்கலம் கீதாகணேசன், பேய்க்குளம் வியாபாரிகள் சங்கத் தலைவா் ஸ்டாலின், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவா் வில்லிம் பெலிக்ஸ், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெயசிலன் உள்பட பலா் உடனிருந்தனா்.